‘எலி’க்குப் பிறகு... வடிவேலுவின் திட்டம்!

‘எலி’க்குப் பிறகு... வடிவேலுவின் திட்டம்!

செய்திகள் 10-Apr-2015 2:39 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவந்த படம் ‘தெனாலிராமன்’. மன்னர் காலத்து கதையம்சத்தைக் கொண்ட இந்த நகைச்சுவை படத்தை யுவராஜ் தயாளன் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். படத்தில் நல்ல கதை சொல்லப்பட்டிருந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் இப்படத்தில் இல்லாததால் இப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ஆனாலும் மீண்டும் யுவராஜையே தனது ‘எலி’ படத்திலும் இயக்குனர் ஆக்கினார் வடிவேலு.

கொள்ளையர்கள் கூட்டத்துக்குள் புகுந்துகொள்ளும் வடிவேலு, அவர்களிடம் சிக்கி சின்னபின்னமாகி ரசிகர்களை சிரிக்க வைப்பதுதான் ‘எலி’ படத்தின் கதையாம். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வடிவேலுவைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். ஆனால், வடிவேலு எதையும் ஒப்புக்கொள்ளவில்லையாம். இப்போதைக்கு ‘எலி’ ரிலீஸில் மட்டுமே கவனமாக இருக்கிறாராம். தவிர, யுவராஜுடன் வடிவேலுவுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதால், தனக்கான இன்னொரு கதையையும் தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம். அது ‘எலி’க்கு அடுத்த படமாக இல்லையென்றாலும், மீண்டும் யுவராஜுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்பதுதான் வடிவேலுவின் திட்டமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;