‘இந்த முறை தப்பாது’ - வாலு ரிலீஸ் தேதியுடன் சிம்பு நம்பிக்கை!

‘இந்த முறை தப்பாது’ - வாலு ரிலீஸ் தேதியுடன் சிம்பு நம்பிக்கை!

செய்திகள் 10-Apr-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகால படங்களில் இத்தனை முறை ரிலீஸ் தேதி மாறியது வேறெந்த படத்திற்கும் இருக்காது. இத்தனைக்கும் ‘வாலு’ படத்தின் பாடல்கள் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகிவிட்டது. பாடல்களும் சூப்பர்ஹிட்டாக ஒலிக்கவே, ‘வாலு’வை ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். கடந்த கிறிஸ்துமஸ், பிறகு பொங்கல், அதன் பிறகு சிம்பு பிறந்தநாள் (பிப்ரவரி 3), அதன் பிறகு மார்ச் 27 என வரிசையாக பலமுறை திட்டமிட்டும் ஏதோ ஒன்று ‘வாலு’வின் ரிலீஸை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தது.

ஆனால், இந்த முறை நிச்சயம் தப்பாது என உறுதியாக மே 9ஆம் தேதியை ‘வாலு’வின் ரிலீஸுக்கு குறித்து வைத்திருக்கிறார் சிம்பு. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்திய அளவில் ‘வாலு’வை டிரென்ட் செய்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘வாலு’ வரட்டும்... சிம்பு ஜெயிக்கட்டும்... வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;