வசூலை வாரி வழங்கும் கார்த்தியின் ‘கொம்பன்’

வசூலை வாரி வழங்கும் கார்த்தியின் ‘கொம்பன்’

செய்திகள் 10-Apr-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

தடைகளை தகர்த்தெறிந்து திரையரங்குகளை ஆக்ரமித்த கார்த்தியின் ‘கொம்பனு’க்கு பட்டிதொட்டியெங்கும் வரவேற்பு எகிறிக் கொண்டிருக்கிறது. முத்தையாவின் இயக்கத்தில் உருவான இந்த ஆக்ஷன் சென்டிமென்ட் படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். படம் வெளியாகி தற்போது 9 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

‘சிறுத்தை’க்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள படங்களில் ‘கொம்பன்’ படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். குறிப்பாக சமீபகால படங்களில் பி மற்றும் சி சென்டர்களில் அதிக அளவு ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்திருப்பது ‘கொம்பன்’ படத்திற்குதான் என்கிறார்கள். 9 நாட்களாகியும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் குறையாததால் இப்படம் வசூலில் இன்னும் சில சாதனைகள் படைக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;