ஐஸ்வர்யா தனுஷ் படத்தை வாங்கியது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்!

ஐஸ்வர்யா தனுஷ் படத்தை வாங்கியது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்!

செய்திகள் 10-Apr-2015 10:19 AM IST VRC கருத்துக்கள்

வரிசையாக பல வெற்றிப் படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் நிறுவனம் ‘ஸ்டுடியோ கிரீன்’. இந்நிறுவனம் சொந்தமாக படங்களை தயாரித்து, வெளியிட்டு வருவதோடு மற்ற பல நிறுவனங்கள் தயாரித்த படங்களையும் வாங்கி விநியோகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி’, விஷ்ணு நடித்து வரும் ‘நேற்று இன்று நாளை’, தெலுங்கில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான ‘பாஹுபலி’ முதலிய படங்களை வெளியிடவிருக்கிறது! இந்த வரிசையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தின் தமிழக விநியோக உரிமையையும் கைபற்றியுள்ளது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம். ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘வை ராஜா வை’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;