கார்த்திக் சுப்பாராஜின் ‘இறைவி’யில் அஞ்சலி?

கார்த்திக் சுப்பாராஜின் ‘இறைவி’யில் அஞ்சலி?

செய்திகள் 10-Apr-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’, விமலுடன் ‘மாப்பிள்ளை’ சிங்கம் என தனது அடுத்த ரவுண்ட்டுக்குத் தயாராகிவிட்டார் நடிகை அஞ்சலி. இப்போதும் புதிததாக சூப்பர் வாய்ப்பு ஒன்று அஞ்சலியின் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது. ஆம்... ‘ஜிகர்தண்டா’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ‘இறைவி’ படத்தில் நடிகை அஞ்சலியும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘இறைவி’யில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன் என ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதேபோல் இப்படத்தின் நாயகிகளுக்கான தேடுதல் வேட்டையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் நடிகை அஞ்சலி நடிப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறதாம். இந்த மாத இறுதிக்குள் ‘இறைவி’யின் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டிரைலர்


;