கார்த்தி, நாகார்ஜுனாவுடன் படப்பிடிப்பில் இணைந்தார் தமன்னா!

கார்த்தி, நாகார்ஜுனாவுடன் படப்பிடிப்பில் இணைந்தார் தமன்னா!

செய்திகள் 9-Apr-2015 1:59 PM IST Chandru கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிவிபி சினிமாஸ்’ தயாரிப்பில் நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. பையா, சிறுத்தை படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் தமன்னா.

வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) முதல் நடிகை தமன்னாவும் கார்த்தி, நாகார்ஜுனாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதனை அவரே தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;