விஷ்ணு படத்தில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

விஷ்ணு படத்தில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர்!

செய்திகள் 9-Apr-2015 12:13 PM IST Chandru கருத்துக்கள்

‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் இப்போது கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிவிட்டார். கமல் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகி வரும் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய மூன்று படங்களுக்கும் ஜிப்ரானே இசையமைப்பாளர். தற்போது ‘சென்னை சிங்கப்பூர்’ படத்திற்கு இசையமைத்து வரும் ஜிப்ரான், அடுத்ததாக விஷ்ணு நடிக்கும் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கும் இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘பிசாசு’ நாயகி பிரயாகா நடிக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கான படப்பிடிப்பு மே இறுதியில் சென்னையில் துவங்குகிறது. அதோடு பாடல் காட்சிகளுக்காக விஷ்ணு, பிரயாகா உள்ளிட்ட படக்குழு 10 நாட்கள் கனடாவுக்கும் செல்லவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டீசர்


;