விஜய் படத்திற்காக கோவாவில் ஜி.வி, அட்லி!

விஜய் படத்திற்காக கோவாவில் ஜி.வி, அட்லி!

செய்திகள் 9-Apr-2015 12:09 PM IST Chandru கருத்துக்கள்

‘புலி’ படத்தைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’ புகழ் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார் ‘இளையதளபதி’ விஜய். ஆக்ஷன், ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படவிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் சமந்தா நடிக்கிறார். அதேபோல் ‘தலைவா’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய்யின் 59வது படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார். இது ஜி.வி.யின் 50வது படம் என்பது இன்னுமொரு கூடுதல் சிறப்பு.

இப்படத்தின் பாடல்கள் ‘சூப்பர்ஹிட்’டாக வரவேண்டும் என்பதற்காக பாடல் உருவாக்கும் பணியில் இப்போது களமிறங்கிவிட்டார்கள் ஜி.வி.யும் அட்லியும். இதற்காக தற்போது கோவா சென்றுள்ள இவர்கள் விரைவில் ‘விஜய் 59’ படத்திற்கான் சூப்பர் ட்யூன்களுடன் சென்னை திரும்பவிருக்கிறார்களாம். ‘சைவம்’ படத்தின் மூலம் தேசியவிருது பெற்ற உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஏற்கெனவே ஒரு பாடலை பதிவுசெய்துவிட்டாராம் ஜி.வி.பிரகாஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;