கமல் உள்ளே... அருண் விஜய், விஜய் சேதுபதி வெளியே!

கமல் உள்ளே... அருண் விஜய், விஜய் சேதுபதி வெளியே!

செய்திகள் 9-Apr-2015 10:34 AM IST Chandru கருத்துக்கள்

சினிமா ரிலீஸ் என்பதே ஒரு ‘உள்ளே வெளியே’ ஆட்டம்தான். திடீரென கடைசி நேரத்தில் ரிலீஸுக்குத் தயாராவதும், சத்தமில்லாமல் ரிலீஸிலிருந்து வெளியேறுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருப்பது வாடிக்கைதான். அந்த வகையில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடித்திருக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதே நாளில் வெளியாவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த திருப்பதி பிரதர்ஸின் இன்னொரு படமான ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவும் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

அதேபோல் அருண்விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகிவரும் ‘வா டீல்’ படமும் மே 1ஆம் தேதி வெளியாவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது கமல் படம் வெளிவருவதால் இப்படத்தின் ரிலீஸும் மாறும் என்கிறார்கள். இந்த இரண்டு படங்களைத் தவிர விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’, யுடிவி தயாரித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய இரண்டு படங்களும் மே 1ஆம் தேதி வெளியாவதாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா அல்லது கடைசி நேரத்தில் வெளியேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மதுரை - டிரைலர்


;