‘ஷீரடி சாய்’ சென்டிமென்டுடன் ஆரம்பமான ‘தல 56’

‘ஷீரடி சாய்’ சென்டிமென்டுடன் ஆரம்பமான ‘தல 56’

செய்திகள் 9-Apr-2015 10:29 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ வெற்றிக்குப் பிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித். இப்படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறார். அஜித்திற்கும், ரத்னத்திற்கும் சாய்பாபாவும் வியாழக்கிழமையும் ரொம்பவே விசேஷம். அந்த சென்டிமென்ட் அஜித்தின் இந்த 56வது படத்திலும் தொடர்கிறது. வியாழக்கிழமையான இன்று (ஏப்ரல் 9) இப்படத்திற்கான பூஜை போடப்படுகிறது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் சந்தானம், தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் கபீர் துஹன் சிங் அஜித்துடன் மோதும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. முதல்முறையாக இப்படத்தின் மூலம் அஜித்துடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத். அஜித்தின் இந்த 56வது படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்குகிறது. ஒளிப்பதிவை வெற்றியும், எடிட்டிங்கை ஆண்டனி ரூபனும் கவனிக்கிறார்கள். மற்ற விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவுப்பு விரைவில் வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;