பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம்!

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம்!

செய்திகள் 9-Apr-2015 10:21 AM IST VRC கருத்துக்கள்

பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக ஜெயகாந்தன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயகாந்தன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் திடீரென்று மரணம் அடைந்தார். தமிழில் ஏராளமான நாவல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார் ஜெயகாந்தன். அவர் எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆகிய நாவல்கள் சிறந்த நாவல்களாகும். இந்த இரண்டு நாவல்களும் தமிழ் திரைப்படங்களாக வெளிவந்தன! இதில் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றது. இந்தியாவின் உயர் விருதுகளான பதம்பூஷன், சாகித்ய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார் ஜெயகாந்தன். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயார்ந்த விருதான ஞானபீட விருதை பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையும் ஜெயகாந்தனுக்கு உண்டு! ஜெயகாந்தனின் மரணம் தமிழ் இலக்கிய துறைக்கு மாபெரும் ஒரு இழப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;