‘காஞ்சனா-2’ சென்சார் ஓவர், ரிலீஸ் தேதி ரெடி!

‘காஞ்சனா-2’ சென்சார் ஓவர், ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 8-Apr-2015 4:35 PM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கியுள்ள ‘காஞ்சனா-2’ இம்மாதம் 17-ஆம் தேதி வெளியாகிறது. ‘சன் பிக்சர்ஸ் வழங்க’, ராகவா லாரன்ஸின் ‘ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று சென்சார் ஆனது. இப்படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் இதற்கு முன் இயக்கி, தயாரித்து நடித்த ‘முனி-2 காஞ்சனா’ மாபெரும் வெற்றி பெற்றதாலும், அதன் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி இருப்பதாலும் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை உலகம் முழுக்க விநியோகிக்கும் உரிமையை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் டாப்சி, கோவை சரளா, ரேணுகா முதலனோர் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;