விஷால் படத்தில் மீண்டும் மீராஜாஸ்மின்!

விஷால் படத்தில் மீண்டும் மீராஜாஸ்மின்!

செய்திகள் 8-Apr-2015 11:48 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீராஜாஸ்மின் ஜோடியாக நடித்த படம் ‘சண்டக்கோழி’. 2005-ல் வெளியாகி வெற்றிபெற்ற இப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. விஷாலே ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் ‘சண்டக்கோழி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீராஜாஸ்மின் ‘சண்டக்கோழி–2’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில நடிக்கிறார். லிங்குசாமி தயாரித்துள்ள கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படம் மே 1-ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படம் வெளியானதும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறாராம் லிங்குசாமி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;