சூர்யா, விஜயை தொடர்ந்து விஷால்

சூர்யா விஜயை தொடர்ந்து விஷால்

செய்திகள் 8-Apr-2015 10:54 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணையத் தொடங்கியுள்ளனர். ‘கோச்சடையான்’ பட சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியும், தெனாலிராமன் படத்தின்போது நடிகர் வடிவேலுவும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பட ரிலீஸின்போது நடிகர் சந்தானமும் ட்விட்டரில் இணைந்தார்கள். சமீபத்தில் நடிகர் சூர்யா ட்விட்டரில் இணைந்தபோது, அதை அவருடைய ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரென்ட் செய்தார்கள்.

அதேபோல் ‘இளையதளபதி’ விஜய்யும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் இணைந்தார். ஏற்கெனவே ஃபேஸ்புக்கிலும் விஜய்க்கு அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. விஜய், சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் இப்போது ட்விட்டரில் இணைந்திருக்கிறார். ட்விட்டரில் தனது கணக்கை சில மாதங்களுக்கு முன்பு நீக்கிய யுவன் ஷங்கர் ராஜா, தற்போது மீண்டும் புதிய கணக்கைத் துவங்கியிருக்கிறார். இவர்களோடு இயக்குனர் சரண், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோரும் ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கு வைத்திருக்கிறார்கள்.

தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் ஆகியோரும் தற்போது அதிகாரபூர்வமாக ட்விட்டரில் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;