ஒரே நாளில் மோதிக் கொள்ளும் குரு, சிஷ்யன்!

ஒரே நாளில் மோதிக் கொள்ளும் குரு, சிஷ்யன்!

செய்திகள் 8-Apr-2015 10:48 AM IST VRC கருத்துக்கள்

கே.பாக்யராஜ் திரைக்கதை எழுதி, நடித்திருக்கும் படம் ‘துணை முதல்வர்’. இந்தப் படத்தை ரா.விவேகானந்தன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். ‘அனுகிரகதா ஆர்ட்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாக்யராஜுடன் ஜெயராம், ஸ்வேதா மேனன், மனோபாலா, சந்தியா முதலானோர் நடித்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் இம்மாதம் 10-ஆம் தேதி ரிலீசாகிறது. அதே நாளில் எம்.மருதுபாண்டியன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இப்படத்தை வாங்கி வெளியிடும் மதுராஜ் என்பவர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர். சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் இளைஞ்ரகள் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லும் இப்படத்தில் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கேம்லின், ராஜா இருவர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். தனது குரு பாக்யராஜின் துணை முதல்வர் படத்துடன் அவர் அனுமதியுடன் தன் படத்தையும் வெளியிடுகிறார் சிஷ்யன் மதுராஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டீசர்


;