சிம்ரனைத் தேடி வரும் அடுத்தடுத்த வாய்ப்புகள்!

சிம்ரனைத் தேடி வரும் அடுத்தடுத்த வாய்ப்புகள்!

செய்திகள் 8-Apr-2015 10:37 AM IST Top 10 கருத்துக்கள்

‘ஆஹா கல்யாணம்’ படம் மூலம் மீண்டும் ரீ&என்ட்ரி கொடுத்த சிம்ரனைத் தேடி இப்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘சிம்ரன் அன்ட் சன்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் சிம்ரன். அதோடு ஜி.வி., ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவும் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது மீண்டும் ஒரு படத்தில் ‘கேமியோ’ ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சிம்ரன்.

‘என்னமோ ஏதோ’ படத்தில் நாயகியாக நடித்த நிகிஷா படேல் அடுத்து நடிக்கவிருக்கும் படம் ‘கரையோரம்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்ரனுக்கு முக்கிய கேரக்டர் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த த்ரில்லர் படத்திற்காக சிம்ரன் ஒரு வார கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் டீஸர் - 3


;