திரு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாகும் டாப்ஸி!

திரு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாகும் டாப்ஸி!

செய்திகள் 8-Apr-2015 10:14 AM IST Chandru கருத்துக்கள்

2013ல் வெளிவந்த அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு டாப்ஸி நடித்த வேறெந்த தமிழ்ப்படமும் ரிலீஸாகவில்லை. ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கும் ‘காஞ்சனா 2’, வை ராஜா வை விரைவில் வெளிவரவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து திரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் டாப்ஸி.

விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் திரு ஜெய்யை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார். சிட்டியை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கும் இப்படத்தில் டாப்ஸிக்கு கும்பகோணத்தைச் சேர்ந்தவராக நடிக்கும் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த மாத இறுதியில் டாப்ஸி நடிக்கவிருக்கும் காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்படவிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;