விஜய் - அட்லி படத்தில் தேசிய விருதுபெற்ற பாடகி!

விஜய் - அட்லி படத்தில் தேசிய விருதுபெற்ற பாடகி!

செய்திகள் 8-Apr-2015 10:01 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருது பட்டியலில் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்தரா உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டது. ‘சைவம்’ படத்தில் தான் பாடிய முதல் பாடலான ‘அழகே அழகே...’ பாடலுக்கே தேசிய விருதை வென்று அசத்திய உத்தரா, ஜி.வி. இசையமைப்பில் மீண்டும் பாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைப்பாளர். இப்படத்திற்காக தான் உருவாக்கிய சூப்பர் டியூன் ஒன்றை உத்தராவின் அழகான குரலோடு பாடலாக சமீபத்தில் பதிவு செய்திருக்கிறாராம் ஜி.வி. இப்பாடலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;