கமல் மகளாக பார்வதி!

கமல் மகளாக பார்வதி!

செய்திகள் 7-Apr-2015 4:20 PM IST VRC கருத்துக்கள்

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மரியான்’ படப் புகழ் பார்வதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் பார்வதி ஏற்று நடித்துள்ள கேரக்டர் எப்படிப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் இப்படத்தில் பார்வதி கமலுக்கு மகளாக நடித்துள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்றுக்கு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ‘பூ’,‘மரியான்’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வழங்கிய பார்வதி, இப்படத்தில் கமலுக்கு இணையான நடிப்பை வழங்கியுள்ளார் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் ரமேஷ் அரவிந்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செண்பக கோட்டை - டிரைலர்


;