இறுதிக்கட்டத்தில் கௌதம் - சிம்பு படம்!

இறுதிக்கட்டத்தில் கௌதம் - சிம்பு படம்!

செய்திகள் 7-Apr-2015 4:02 PM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கௌதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் இறக்குமதி பல்லவி சுபாஷ் நடிக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் மூலம் கௌதம் - சிம்புவுடன் மீண்டும் இணைந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் என மூன்றும் கலந்த கலவையாக உருவாகி வரும் இப்படத்தின் ‘டாக்கி போர்ஷனு’க்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டதாம். இன்னும் ஒரு சில பாடல்களைத் தவிர்த்து படத்தின் 95% படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் சென்னையில், அதுவும் இரவு நேரத்திலேயே இப்படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. படம் மே இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;