‘கொம்பன்’ 5 நாட்களில் 21 கோடி வசூல்!

‘கொம்பன்’ 5 நாட்களில் 21 கோடி வசூல்!

செய்திகள் 7-Apr-2015 3:54 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டு வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் சம்பந்தமாக ஏற்பட்ட சில பிரச்சனைகளால் முதலில் திட்டமிட்டிருந்த படி இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவில்லை! ஆனால் பிரச்சனை முடிந்து படம் வெளியாகிய நாளிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதால் நாளை முதல் மேலும் 120 தியேட்டர்களில் கொம்பனை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. ‘கொம்பன்’ வெளியான 5 நாட்களிலேயே (ஏப்ரல்-1ஆம் தேதி மாலை நடைபெற்ற இரண்டு காட்சிகள் உட்பட…) தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்த இராமநாதபுரம் ,மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ‘கொம்பன்’ படக்குழுவினர் பெரும் மகிச்சியில் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;