கொம்பனை பார்க்காத லட்சுமி மேனன்!

கொம்பனை பார்க்காத லட்சுமி மேனன்!

செய்திகள் 7-Apr-2015 3:12 PM IST Chandru கருத்துக்கள்

சென்னையில் இன்று காலை ‘கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ‘கொம்பன்’ பட நாயகி லட்சுமி மேனன் பேசும்போது, ‘‘முதலில் என்னோட தனிப்பட்ட ஒரு விஷயத்தை விளக்கி விடுகிறேன். எல்லோரும் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள், எப்போது தான் நீங்கள் படித்து முடிக்கப் போகிறீர்கள் என்று! இப்போது உங்களுக்கெல்லாம் சொல்லி கொள்கிறேன், என்னுடைய படிப்பு, பரீட்சை எல்லாம் முடிந்து விட்டது என்று! ‘கொம்பன்’ படத்தில் நடித்தது குறித்து நிஜமாக சொல்வதென்றால் ஷூட்டிங் நடக்கும்போது என்னோட ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் இயக்குனர் முத்தையா அவ்வளவு கஷ்டப்பட்டு, விரிவாக சொல்லிகிட்டே இருப்பார்! அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு, நான் தான் நடிக்கிறேனே, எதற்கு இவர் இப்படியெல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணி சொல்லி தருகிறார் என்று! சொல்லப் போனால் அவர் அப்படி சொல்லி தரும்போது விருப்பம் இல்லாமல் தான் நடித்து கொண்டேன்! ஆனால் இப்போது தெரிந்தது எதற்கு அவர் அப்போது அப்படியெல்லாம் சொல்லி தந்தார் என்று! படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு கொம்பன் படத்திற்கு கிடைத்துள்ளது. தினம் தினம் எனக்கு நிறைய ஃபோன் கால்ஸ் வருகிறது. ஆனால் நான் இதுவரைக்கும் ‘கொம்பன்’ படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம் இதுவரை நடந்து வந்த பரீட்சை தான். ஆனால் கண்டிபாக விரைவில் பார்த்து விடுவேன்! எல்லாருக்கும் நன்றி’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;