அமலாபாலுக்கு பிடித்த விஜய்யின் கதை!

அமலாபாலுக்கு பிடித்த விஜய்யின் கதை!

செய்திகள் 7-Apr-2015 2:18 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து விஜய் இயக்கியுள்ள ‘இது என்ன மாயம்’ பத்தின் அடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலாபால் பேசும்போது, ச் ‘‘விடுமுறை நாட்களில் விஜய் என்னிடம் நிறைய கதைகளை சொல்வார். அதுபோல் ‘இது என்ன மாயம்’ படத்தின் கதையையும் ஒரு நாள் என்னிடம் சொல்லியிருந்தார். அந்த கதையை கேட்டதும் எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. இப்போது அந்த கதை ‘இது என்ன மாயம்’ என்ற பெயரில் படமாகியுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது என்று நினைக்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார். ‘மேஜிக் ஃப்ரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;