மெட்ராஸ்’ கலையரசன் நடிக்கும் ‘ஜின்’

மெட்ராஸ்’ கலையரசன் நடிக்கும் ‘ஜின்’

செய்திகள் 7-Apr-2015 10:55 AM IST Chandru கருத்துக்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த ‘மெட்ராஸ்’ படத்தில் அன்பு கேரக்டரில் நடித்த கலையரசன் தற்போது ‘ஜின்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். சதீஷ் சந்திரசேகரன் எழுதி, இயக்கும் இப்படத்தில் ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஷ்காந்த், காளி வெங்கட், ‘வாயை மூடிப்பேசவும்’ அர்ஜுன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ப்ரீத்தி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ரமீஸ் ராஜ் புரெடாக்ஷன்ஸ், சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;