சுசீந்திரனின் அடுத்த படம் ‘வில் அம்பு’

சுசீந்திரனின் அடுத்த படம் ‘வில் அம்பு’

செய்திகள் 7-Apr-2015 10:31 AM IST Chandru கருத்துக்கள்

விஷால், காஜல் அகர்வால் நடிக்க ‘பாயும் புலி’ படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் சுசீந்திரன். இப்படத்தை இயக்கும் பணிகள் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, இன்னொருபுறம் சத்தமில்லாமல் புதிய படம் ஒன்றை தயாரித்துக் கொண்டும் இருக்கிறார். ஸ்டார் ஃபிலிம் லேன்ட், நல்லுசாமி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘வில் அம்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரமேஷ் சுப்ரமணியம் எழுதி, இயக்கும் இப்படத்தில் ‘வழக்கு எண் 18/9’ படப்புகழ் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஒரே ஏரியாவில் வசிக்கும் பணக்கார இளைஞன் ஒருவனுக்கும், மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவனுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள்தான் இந்த ‘வில் அம்பு’ படத்தின் கதைக்களமாம். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும இப்படத்திற்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு வேலைகளையும், நவீன் இசையமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;