‘பாயும்புலி’க்கு ரிலீஸ் தேதியை உறுதிசெய்த விஷால்!

‘பாயும்புலி’க்கு ரிலீஸ் தேதியை உறுதிசெய்த விஷால்!

செய்திகள் 6-Apr-2015 11:54 AM IST Chandru கருத்துக்கள்

‘பாண்டியநாடு’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஏவிஎம் நிறுவனத்திடம் தடையில்லா சான்று பெற்று அனுமதி வாங்கித்தான் ‘பாயும் புலி’ என்ற டைட்டிலை விஷால் தனது படத்திற்கு சூட்டியிருக்கிறாராம்.

இப்படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் விஷால் பேசும்போது...

‘‘முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது. ‘பாயும்புலி’ தலைப்புக்கு ஒரு பலம் இருக்கிறது. அதற்காகவே வாங்கினோம்.

காஜல் அகர்வாலுடன் எனக்கு முதல் படம். இயக்குநர் சுசீந்திரனுடன் 2வது படம். மதுரையை பின்னணியாகக் கொண்ட கதை. இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால் வழக்கமாக இருக்காது. எப்போதும் சுசீந்திரன் நடுத்தர வர்க்கம் பற்றி பேசுபவர், சிந்திப்பவர். அது எனக்குப் பிடிக்கும். இந்தப்படமும் நடுத்தர வர்க்கம் பற்றிய கதைதான். இசை இமான். மதுரை பின்னணியில் ‘பாண்டியநாடு’ படம் பார்த்து இருக்கிறார்கள். இதையும் பார்க்கப் போகிறார்கள். நிஜ சம்பவங்களும் நிஜமுகங்களும் பார்க்கலாம். படத்தில் ஒரு நிஜ ரவுடியும் நடிக்கிறார். செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்திக்கு ‘பாயும் புலி’ வெளியாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;