கொக்கு, மீனுக்கிடையிலான போராட்டம் உறுமீன்!

கொக்கு, மீனுக்கிடையிலான போராட்டம் உறுமீன்!

செய்திகள் 6-Apr-2015 11:13 AM IST VRC கருத்துக்கள்

‘ஆக்சஸ் ஃபில்ம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்துள்ள படம் ‘உறுமீன்’. இப்படத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன், மனோபாலா, கஜராஜா, சித்தன் மோகன், சான்ட்ரா எமி ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் அச்சு இசை அமைத்துள்ளார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமி பேசும்போது,

‘‘இப்படம் ஃபேன்டசி த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது. உறுமீன் என்றால் என்ன என்பது ஒரு கேளிவியாக இருக்கும்! அவ்வையாறுடைய பதினாறாவது பாடலில் வரும் ஒரு வார்த்தை தான் உறுமீன். ஒரு கொக்கு ஒரு மீன், இந்த இரண்டு உயிரனங்களுக்கு இடையில் ஒரு வேட்டை இருக்கும். கொக்கு மீனை வேட்டயாடுவது சுவாரஸ்யமாக இருக்கும்! அதை நீங்கள் கவனித்தால் தெரியும். அதுமாதிரி ஒரு சுவாரஸ்யமான வேட்டை தான் இப்படம். இதில் நீங்கள் அன்றாடம் செய்தித் தாள்களில் படிக்கிற, பார்க்கிற பல விஷயங்களும் இருக்கும். அதனை ஃபாரஸ்ட், நகரம் என இரண்டு பேக்ட்ராப்பில் சொல்லியிருக்கிறேன்! காடு என்றால் பச்சை நிறம்! நகரம் என்றால் என் கருத்துபடி கருப்பு நிறம்! இந்த இரண்டு கலரும் சேர்ந்தால் சாம்பல் நிற கலர் கிடைக்கும்! அந்த சாம்பல் நிற கலர் டோன் இப்படம்! அது என்ன என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்! எல்லோரும் இது வித்தியாசமான படம் என்று சொல்வார்கள்! ஆனால் உண்மையில் இப்படம் வித்தியாசமான படமாக இருக்கும். படத்தின் இசையும், பாடல்களும், விஷுவல்ஸும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தை நீங்கள் விரைவில் என்ஜாய் பண்ணி பார்க்க போகிறீர்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;