அர்ஜுன் படத்துக்காக பல லட்ச ரூபாய் செட்!

அர்ஜுன் படத்துக்காக பல லட்ச ரூபாய் செட்!

செய்திகள் 6-Apr-2015 10:48 AM IST VRC கருத்துக்கள்

குப்பி, வனயுத்தம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு ‘ஒரு மெல்லிய கோடு’ என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். இவர்களுடன் மனிஷா கொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது... ‘‘இது வழக்கமான படமாக இருக்காது. திரைக்கதையில் இது வேறு ஒரு கோணத்தை உருவாக்கும். இந்த படத்திற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பல லட்ச ரூபாய் செலவில் தடவயியல் ஆய்வுக்கூட செட் ஒன்று போடப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான மரணங்களின் உண்மை நிலையைக் கண்டறிய பிரேதங்களை ஆய்வு செய்யும் அரங்கு அது. அதில் அர்ஜுன் - ஷாம் - மனிஷா கொய்ராலா ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.’’ என்றார்.

நடிகர் அர்ஜுன்... ‘‘இது என் சினிமா கேரியரில் புதுசு.. இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து அசை போட்டுக்கொள்ள இது போன்று ஒரு படத்தில் நடித்தோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் படியான கதாப்பாத்திரம் எனக்கு!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;