‘ஓ காதல் கண்மணி’ ரிலீஸ் தேதி ரெடி!

‘ஓ காதல் கண்மணி’ ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 4-Apr-2015 12:50 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், கனிஹா முதலானோர் நடித்துள்ளனர். வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படம் என்றால் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால் இப்படத்தை பொறுத்தவரையில் மணிரத்னம் குறுகிய காலத்திற்குள் எடுத்து முடித்து, ரிலீசுக்கும் தயாராகி விட்டார். லேட்டஸ்ட் தகவலின் படி ‘ஓ காதல் கண்மணி’ படம் இம்மாதம் 17-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ‘ஓ காதல் கண்மணி’யை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்பது ஏற்கெனவே வெளியான தகவல்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;