10 வருட பயணம் - ரசிகர்களை சந்திக்கிறார் விஷால்!

10 வருட பயணம் - ரசிகர்களை சந்திக்கிறார் விஷால்!

செய்திகள் 4-Apr-2015 12:04 PM IST VRC கருத்துக்கள்

10 வருடங்கள், கிட்டத்தட்ட 20 படங்கள்.. இதுதான் நடிகர் விஷாலின் சினிமா கேரியர் கிராஃப்! 2004-ல் ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷால், கடந்த 10 வருடங்களில் நடித்த படங்களின் எண்ணிக்கை என்னவோ குறைவு தான்! ஆனால் அவர் சம்பாதித்த ரசிகர்களின் எண்ணிக்கை பல்லாயிர கணக்கானது! எப்போதுமே ரசிகர்களுக்கு மதிப்பளித்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை சந்தித்து மகிழும் நடிகர்களில் விஷாலும் ஒருவர்! விஷால் நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி விஷால் நாளை (5-4-15) பல்லாயிரக்கணக்கான தமிழகம் மற்றும் கேரளா ரசிகர்களை சந்தித்து உரையாட உள்ளார். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும்புலி’ படத்தில் நடித்து வரும் விஷால் இதற்காகவே நேரத்தை ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;