அதிகாரபூர்வ அறிவிப்பு - கார்த்தியுடன் மீண்டும் இணையும் தமன்னா!

அதிகாரபூர்வ அறிவிப்பு - கார்த்தியுடன் மீண்டும் இணையும் தமன்னா!

செய்திகள் 4-Apr-2015 11:25 AM IST VRC கருத்துக்கள்

‘பிவிபி சினிமாஸ்’ தயாரிப்பில் கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. வம்சி இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதி ஹாசன் இப்படத்திலிருந்து சமீபத்தில் விலகினார். இதனை தொடர்ந்து இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கு தமன்னா தேர்வாகியிருக்கிறார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்! தமன்னா கைவசம் தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ‘பாஹுபலி’ ‘பெங்கால் டைகர்’ என பல படங்கள் உள்ளன! கார்த்தியுடன் தமன்னா ஏற்கெனவே ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். வம்சி இயக்கும் இப்படத்தின் மூலம் கார்த்தியுடன் மூன்றாவதாக ஜோடி சேருகிறார் தமன்னா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;