ஹேப்பி பர்த்டே ஷாம்!

ஹேப்பி பர்த்டே ஷாம்!

செய்திகள் 4-Apr-2015 10:49 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ’12B’ படத்தின் மூலம் 2001-ல் ஹீரோவாக அறிமுகமானவர் ஷாம். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் ஷாம் நடித்திருந்தாலும், சினிமாவில் சொல்லும் படியான ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை! ஷாமின் நடிப்பு திறமையை எடுத்துச் சொல்ல ‘பாலா’, ‘இயற்கை’ ‘6’ போன்ற ஒரு சில படங்களே போதும்! ஷாம் நடித்து அடுத்து வரவிருக்கும் படம் எஸ்.பி.ஜனநாதனின் ‘புறம்போக்கு’. மே-1ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸை பெரும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஷாமுக்கு இன்று விசேஷமான நாள்! ஷாம் பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதொடு, அவர் நடித்துள்ள ‘புறம்போக்கு’ படம் வெற்றி பெறவும் ‘டாப் 10 சினிமா’ வாழ்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;