சிம்ரன் பிறந்த நாளில் புதிய அறிவிப்பு!

சிம்ரன் பிறந்த நாளில் புதிய அறிவிப்பு!

செய்திகள் 4-Apr-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன்! ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் நடித்த சிம்ரன் பிறகு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு ஒரு இடைவெளிவிட்டு சிம்ரன் மீண்டும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என நடித்தார்! அத்துடன் இப்போது அவர் சொந்தமாக ‘சிமரன் அன்ட் சன்ஸ்’ என்ற திரைப்பட நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து இயக்க இருக்கிறார் சிம்ரன். இன்று (ஏப்ரல்-4) சிம்ரன் பிறந்த நாள்! தனது பிறந்த நாளையொட்டி சொந்த பட நிறுவனம் மூலம் திரைபப்டங்களை தயாரித்து இயக்க இருக்கும் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் சிம்ரன்! இன்று பிறந்த நாள் காணும் சிம்ரனுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதோடு, திரைப்பட தயாரிப்பாளராக, இயக்குனராக சிம்ரன் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலி 2 - டிரைலர்


;