சூர்யாவின் ‘24’ படத்தின் புதிய தகவல்கள்!

சூர்யாவின் ‘24’ படத்தின் புதிய தகவல்கள்!

செய்திகள் 3-Apr-2015 4:55 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா நடித்து வந்த ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ‘மாஸ்’ படத்தை தொடர்ந்து சூர்யா, விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 8-ஆம் தேதி மும்பையில் துவங்கவிருக்கிறது. சூர்யா நடித்த ‘ஆய்த எழுத்து’ ‘சில்லுனு ஒரு காதல்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் ‘36 வயதினிலே’ மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைகூ’ ஆகிய படங்களை தயாரிக்கும் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தான் 24 படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - புதிய டிரைலர்


;