சமந்தா வெளியிடும் பேபி!

சமந்தா வெளியிடும் பேபி!

செய்திகள் 3-Apr-2015 4:27 PM IST Top 10 கருத்துக்கள்

‘வெண்நிலா வீடு’, ‘ஐவராட்டம்’, ‘CSK ஆகிய படங்களை உலகெங்கும் வினியோகம் செய்தவர் ‘தி வைப்ரன்ட் மூவிஸ்’ வெங்கடேஷ் ராஜா. இவர் அடுத்து ‘பேபி’ என்ற படத்தை உலகமெங்கும் விநியோகம் செய்ய உள்ளார். இப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய டி.சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் Digital Motion Poster வருகிற 6-ஆம் தேதி அன்று சரியாக மாலை 6 மணி 6 நிமடத்திற்கு சமந்தா தனது ட்விட்டரில் வெளியிடுகிறார். 6-ஆம் தேதி, 6 மணி, 6 நிமடம்… இதுவே படத்தின் கதையை குறிக்கிறது. இப்படத்தில் மனோஜ் பாரதிராஜா, குழந்தை நட்சத்திரங்கள் சாதன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;