எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘இன்று நேற்று நாளை’

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘இன்று நேற்று நாளை’

செய்திகள் 3-Apr-2015 11:34 AM IST Top 10 கருத்துக்கள்

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து வழங்கும் படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு, ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை வசந்தும், எடிட்டிங்கை லியோ ஜான் பாலும் கவனிக்கிறார்கள்.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் இதுவரை சொல்லப்படாத ‘டைம் மெஷின்’ கான்செப்டை முதன்முறையாக இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதை சீரியஸாக சொல்லாமல் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து வித்தியாசமான ‘சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி’ படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் எதிர்பார்ப்பு இப்போதே ஆரம்பாகிவிட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;