கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன் இணையும் ‘கிரகணம்’

கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன் இணையும் ‘கிரகணம்’

செய்திகள் 3-Apr-2015 11:10 AM IST Chandru கருத்துக்கள்

‘கயல்’ படத்தின் நாயகன் சந்திரனும், நடிகர் கிருஷ்ணாவும் புதிய படமொன்றில் இணைந்து நடிக்கிறார்கள். பிவிபி சினிமா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கிரகணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘வி&சித்திரம்’ எனும் குறும்படம் மூலம் பிரபலமடைந்த இளன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹீரோயினாக நந்தினி ராய் நடிக்கும் இந்த ‘கிரகணம்’ படத்தில் காமெடிக்காக கருணாஸும், கருணாகரனும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ‘கிரகணம்’ படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரீ சரவணனும், இசையை சுந்தரமூர்த்தியும், எடிட்டிங்கை மணிகுமரனும் கவனிக்கிறார்கள்.

இன்று காலை இப்படத்திற்கான பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர்கள் யுடிவி தனஞ்செயன், கே.ஈ.ஞானவேல்ராஜா, ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ், இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர்கள் கிருஷ்ணா, சந்திரன், பாபி சிம்ஹா, கருணாஸ் உட்பட கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரா - டிரைலர்


;