இந்திய அளவில் பிரபலமடைந்த ‘வா டீல்’

இந்திய அளவில் பிரபலமடைந்த ‘வா டீல்’

செய்திகள் 3-Apr-2015 10:43 AM IST Chandru கருத்துக்கள்

1995ல் அருண் விஜய்யின் முதல் படம் வெளியானது. சினிமாவில் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் சளைக்காமல் இன்னமும் தனக்கான உயரத்தை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கிறார். அவரின் 20 வருட கடின உழைப்பிற்கும் சேர்த்து மொத்த பலனாக சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ‘விக்டர்’ கேரக்டர் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. வில்லனாக நடித்து அதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தது சமீபத்திய வரலாற்றில் அருண் விஜய்யாகத்தான் இருக்க முடியும். குறிப்பாக அஜித்தின் ரசிகர்கள் பலரும் அருண் விஜய்யின் ரசிகர்களாகவும் மாறியது அவருக்கு ஆச்சரிய சந்தோஷம்!

தற்போது தன் அடுத்த பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். ரத்னசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர் நடித்திருக்கும் ‘வா டீல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அருண் விஜய்க்கு எவ்வளவு வரவேற்பு கூடியிருக்கிறது என்பது, #VaaDeal என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரென்ட் ஆகி இருப்பதிலேயே தெரிகிறது. இதில் அஜித் ரசிகர்களுக்கும் முக்கிய பங்குண்டு. பொதுவாக அருண் விஜய்யை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதால், அவரின் ‘வா டீல்’ வெற்றியடைய சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;