தனுஷ் பிஃப்டி... விக்ரம் பிரபு செஞ்சுரி!

தனுஷ் பிஃப்டி... விக்ரம் பிரபு செஞ்சுரி!

செய்திகள் 3-Apr-2015 10:15 AM IST Chandru கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியானது. வித்தியாசமான நான்கு கெட்அப்களில் தனுஷ் நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமைரா தஸ்தர், வில்லனாக கார்த்திக், போலீஸாக ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஹாரிஸின் இசையமைப்பில் உருவான பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, ‘டாங்கா மாரி...’ பாடல் பட்டிதொட்டியெங்கும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படம் தற்போது 50வது நாளை எட்டியிருப்பதால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘வெள்ளக்காரதுரை’ படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. விமர்சனரீதியாக இப்படம் கொஞ்சம் எதிர்மறை கருத்துக்களை சந்தித்தாலும் வசூல்ரீதியாக நல்ல லாபத்தைக் கொடுத்தது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சூரியின் காமெடி, இமானின் பாடல்கள் இப்படத்திற்கு ப்ளஸாக அமைய தற்போது இப்படம் 100வது நாளை எட்டியிருக்கிறது. பிரபு குடும்பத்திற்கு சொந்தமான சென்னை சாந்தி திரையரங்கத்தில் இப்படம் 100 நாட்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;