இனியா, நடிகையாகவே நடிக்கும் படம்!

இனியா, நடிகையாகவே நடிக்கும் படம்!

செய்திகள் 2-Apr-2015 9:53 AM IST VRC கருத்துக்கள்

‘என் வழி தனி வழி’ படத்தை தொடர்ந்து ஆர்.கே.யும், ஷாஜி கைலாசும் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இந்தப் படத்தில் ஆர்.கே.யுடன் நீத்து சந்திரா, கோமல் சர்மா, இனியா, சுஜா வாருன்னி என பல ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் இனியா நடிகையாகவே நடிக்கிறார். ரெயிலில் ஏசி கோச்சில் முன்று இளம் பெண்களுடன் இனியாவும் பயணிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அதில் நடிகையான இனியாவும் மாட்டிக் கொள்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரயில் மற்றும் ரயில் நிலையம் போன்ற செட் அமைத்து இப்போது அதில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;