விஜய் ஆன்டனியுடன் இணையும் அருந்ததி நாயர்!

விஜய் ஆன்டனியுடன் இணையும் அருந்ததி நாயர்!

செய்திகள் 2-Apr-2015 9:46 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி நடித்து வந்த ‘இந்திய பாகிஸ்தான்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டு இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி ‘செய்தான்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கான் நடிகர், நடிகைகள் மற்று தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது, இப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்க ‘பொங்கி எழு மனோகரா’ படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எக்ஸ் வீடியோஸ் தமிழ் - டீசர்


;