தமிழில் ஒரு கராத்தே கிட்!

தமிழில் ஒரு கராத்தே கிட்!

செய்திகள் 1-Apr-2015 5:13 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கிய ‘பிதாமகன்’, கௌதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’, ஏ.அர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ படங்கள் உட்பட பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ‘ஸ்டன்’ சிவா. இதுவரை ஸ்டன்ட் காட்சிகளை மட்டும் இயக்கி வந்த ‘ஸ்டன்’ சிவா ‘கராத்தேகாரன்’ பத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார். கராத்தே எனும் தற்காப்பு கலையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் அவரது மகன் கெவின் முக்கிய கேரக்டரில் நடிக்க, கெவினுக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக ‘ஸ்டன்’ சிவாவின் மனைவி LANYHAU நடிக்கிறார். இவர்களுடன் ஸ்டீவன், நந்தாபெரியசாமி, ரோகினி, ஆண்டனிதாசன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘‘ஆதரவற்ற ஒரு ஏழை சிறுவன் கராத்தே கற்று, எதிர்காலத்தில் எப்படி கராத்தே சாம்பியன் ஆகிறான் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரி கதை! அத்topதுடன் ஒவ்வொருத்தரும், அதிலும் குறிப்பாக பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் வெளிவந்த ‘கராத்தே கிட்’ படம் உட்பட ஏற்கெனவே இது போன்ற பல படங்கள் வெளிவந்துள்ளது என்றாலும், இந்திய சினிமாவில் இது ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் ‘ஸ்டன்’ சிவா.

பிரபல கிட்டார் இசை கலைஞர் கேபா இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவுக்கு என்.எஸ்.உதய், பாடல்கள் மற்றும் வசனத்திற்கு மதன் கார்க்கி, படத்தொகுப்புக்கு ஆன்டனி என பெரும் கலைஞர்கள் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தை ‘செவன் ஸ்டார் யுனிவர்சல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் ‘ஸ்டன்’ சிவாவின் மனைவி LANYHAU தயாரிக்கிறார். இவரும் மார்ஷியல் ஆர்ட்ஸில் வல்லமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;