‘கொம்பனு’க்கு கிரீன் சிக்னல்... மாலை முதல் காட்சிகள்

‘கொம்பனு’க்கு நீதிமன்றம் கிரீன் சிக்னல்... மாலை முதல் காட்சிகள்

செய்திகள் 1-Apr-2015 3:39 PM IST Chandru கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தை தடைசெய்ய வேண்டும் என அப்படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த ஒரு சில நாட்களாக திடீர் பரபரப்பை ஏற்படுத்திய ‘கொம்பன்’ பட ரிலீஸ் சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இன்று மாலையிலிருந்து இப்படத்திற்கான காட்சிகள் துவங்குகின்றன.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியிலும் ‘கொம்பன்’ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு படத்தில் எந்தவித சர்ச்சைக்குரிய வசனமும், காட்சியும் இடம்பெறவில்லை எனவும் பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். இதனால் ‘கொம்பன்’ படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா தானா பாடல் வீடியோ


;