4-ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் ட்ரீட்!

4-ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் ட்ரீட்!

செய்திகள் 1-Apr-2015 10:08 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், கனிஹா முதலானோர் நடித்துள்ள் ‘ஓகே கண்மணி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ‘கடல்’ படத்திற்கு பிறகு குறுகிய காலத்திற்குள் மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் மொத்த பாடல்களும் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் இருக்கிறார்கள் ரசிகர்கள்! அவர்களுக்கு இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி! ‘ஓகே கண்மணி’யின் அனைத்து பாடல்களும் வருகிற 4-ஆம் தேதி சனிக்கிழமையன்று வெளியாகிறது! மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படங்களின் பாடல்களில் ஒரு தனி தன்மை இருக்கும்! அந்த தனி தன்மை இப்படத்தின் பாடல்களிலும் இருக்கும் என்பதற்கு முதலில் வெளியான அந்த ஒரு பாடலே உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்துடன் இப்படத்தில் இணைந்து இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.சி.ஸ்ரீராம். பாடல்களை கவிப் பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் கைபற்றியுள்ளது.

OK Kanmani - Audio Launch Announcement Teaser

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;