இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் தனுஷ், எமி ஜாக்சன்!

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் தனுஷ், எமி ஜாக்சன்!

செய்திகள் 31-Mar-2015 4:35 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. தனுஷுடன் எமி ஜாக்சன் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஒரு இடைவெளிவிட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தயாரித்த தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு இசை அமைத்த அனிருத் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். தனுஷ் தற்போது இந்த படத்துடன் ‘மாரி’, ‘சூதாடி’, என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ


;