விஷால் படத்தில் ஆர்.கே.க்கு 60 வயது!

விஷால் படத்தில் ஆர்.கே.க்கு 60 வயது!

செய்திகள் 31-Mar-2015 1:15 PM IST VRC கருத்துக்கள்

விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘பாயும் புலி’. ‘வேந்தர் மூவீஸ்’ தயாரித்து வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 வயது முதியவர் கேரக்டர் ஒன்று வருகிறது! அந்த கேரக்டரில் நடிகர் ஆர்.கே.யை நடிக்க வைத்திருக்கிறார் சுசீந்திரன். ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’ ‘என் வழி தனி வழி’, ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே., கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றால் வில்லன் கேரக்டர்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயங்குவதில்லை! அந்த வகையில் பாலா இயக்கிய ‘அவன் இவன்’, நேசன் இயக்கிய ‘ஜில்லா’ உட்பட பல படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள ஆர்.கே., இப்போது சுசீந்திரன் இயக்கி வரும் ’பாயும் புலி’ படத்திலும் வித்தியாசமான ஒரு கேரக்டரில் தான் நடித்து வருகிறார். இந்த படம் தவிர தனது சொந்த தயாரிப்பில், ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ஆர்.கே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;