சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் பிரேம்ஜி அமரன்!

சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் பிரேம்ஜி அமரன்!

செய்திகள் 31-Mar-2015 10:44 AM IST Chandru கருத்துக்கள்

எதையாவது ஏடாகூடாமாக முட்டாள்தனமாக செய்பவனை ‘மாங்கா மடையன்’ என ஊர்ப்புறங்களில் சொல்வது வழக்கும். அப்படியொரு அடிமுட்டாள் கேரக்டரில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் படம்தான் ‘மாங்கா’வாம். ட்ரீம் ஸ்சோன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக அத்வைதா, லீமா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி வருபவர் ஆர்.எஸ்.ராஜா. ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்ய, நடிகர் பிரேம்ஜி அமரனே இசையமைக்கும் பணியையும் கவனித்து வருகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா பேசும்போது, ‘‘இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள், தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான். இவனுடைய முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி) யை சந்திக்கிறான். இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை!‘‘ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;