’கொம்பன்’ குறித்து தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா விளக்கம்!

’கொம்பன்’ குறித்து தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா விளக்கம்!

செய்திகள் 31-Mar-2015 10:37 AM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ படத்தில் ஜாதி சம்பந்தமான வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்பட்டு, இந்த படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்திருக்கும் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா ‘கொம்பன்’ படத்தில் ஜாதி ரீதியான காட்சி அமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் நல்ல படங்களை தயாரித்து மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் நிறுவனம். ஏப்ரல் 2 அன்று எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்து, முத்தையா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘கொம்பன்’ படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியை குறிக்கும் காட்சியமைப்போ, வசனங்களோ இடம் பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.

இதில் குறிப்பிட்ட ஒரு ஜாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட ஒரு ஜாதிய தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம் பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். யூகத்தின் அடிப்படையில் ‘கொம்பன்’ திரைப்படம் பற்றி தவறான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. படம் வெளிவந்தவுடன் இவை அனைத்தும் அடிப்படையற்றவை என்பது அனைவருக்கும் தெரிய வரும்.

பல கோடி ரூபாய் செலவில் பலரது கடின உழைப்பில் உருவாகியுள்ள ‘கொம்பன்’ திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று அதில் கே.ஈ.ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;