ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ராய் லக்ஷ்மி!

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ராய் லக்ஷ்மி!

செய்திகள் 31-Mar-2015 10:01 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்திற்குப் பிறகு ‘அகிரா’ எனும் பாலிவுட் படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் கதையே, ஹிந்தியில் நாயகியாக மையாக வைத்து மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ‘அகிரா’வின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 2ம் கட்ட படப்பிடிப்பில் நடிகை ராய் லக்ஷ்மியும் கலந்து கொள்கிறார். இது ராய் லக்ஷ்மி நடிக்கும் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் இப்படத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;