‘குற்றம் கடிதல்’ இயக்குனரை பாராட்டிய பாரதிராஜா!

‘குற்றம் கடிதல்’ இயக்குனரை பாராட்டிய பாரதிராஜா!

செய்திகள் 30-Mar-2015 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

2-வது தேசிய விருதுகளுக்கான பட்டியலில் பிரம்மா. கோ எழுதி, இயக்கிய ‘குற்றம் கடிதல்’ தமிழ் படம் தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளாதுது. இன்னும் திரைக்கு வராத இப்படம் ஏற்கெனவே பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழா, 13-வது புனே சர்வதேச திரைப்பட விழா, 16-வது ஜிம்பாவே சர்வதேச திரைப்பட விழா, 16-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா, 12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா என பல விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை அள்ளிதயோடு, கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாகிய ஒரே தமிழ் படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு கிடைத்தது.
இப்படி பல விருதுகளை குவித்துள்ள ‘குற்றம் கடிதல்’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் இப்படத்தை தயாரித்திருக்கும் ‘ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷன்’ அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷும், கிறிஸ்டி சிலுவப்பனும்! இதனையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக இயக்குனர் பிரம்மா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த ராதிகா ப்ரஸித்தா, சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன், மாஸ்டர் அஜய், இசை அமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன், காஸ்ட்யூம் டிசைனர் மாலினி, புகைப்பட கலைஞர் ராம்குமார், பாடகர் ராஜேஷ், பாடலாசிரியர் ஜெரால்ட் திரவ் உட்பட படத்தில் பணியாற்றிய அத்தனை பேரையும் மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பார்திராஜா பேசும் போது, ‘‘இந்த பூமியை பதித்தவன் பிரம்மன்! இந்த பூமியில் நானும் ஒரு படைப்பாளி என்று இந்த படத்தின் இயக்குனர் பிரம்மா நமக்கு பிரம்மனாக காட்சி அளிக்கிறார்! பொதுவாக இந்த சத்யம் தியேட்டரில் நான் பேசுவதில்லை. காரணம், மைக் முன்னால் நின்று ஒரு பொய்யை உண்மை என்று பேசுவது ஒரு சம்பிரதாயம், சடங்கு! நல்ல வேளை, உண்மையில் ஒரு உண்மையை பேசுவதற்கு இன்று இந்த மேடை கிடைத்ததில் மகிழ்ச்சி! ஆனால் தேசிய விருது குழுவின் தலைவராக இருந்து நான் செயல்பட்டதால் இந்த விழாவிற்கு வரக்கூடாது என்று தான் இருந்தேன்! ஆனால் உண்மையான ஒரு விழாவை தவிர்க்க கூடாது என்று தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன்.

‘குற்றம் கடிதல்’ படத்தை பார்த்த்போது எனக்குள் ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. இதுபோன்ற படங்களை நாம் எடுக்காமல் போய் விட்டோமே என்று! அஸ்ஸாம், வங்காளம், மலையாளம் என பல மொழிகளிலாக இது போன்ற படங்கள் வரும்போது நம்மால் இதுபோன்ற படங்களை செய்ய முடியாதா என்று நான் ஏங்கியதுண்டு! அதுபோன்ற முயற்சிகளை நான் செய்யாமல் விட்டு விட்டோமா என்று கவலைப்பட்டதும் உண்டு! ஆனால் இப்போது சினிமாவுக்கு வரும் 50 சதவிகித இளைஞர்கள் மிக அழகாக இது போன்ற படங்களை எடுத்து அதை இந்திய அளவிலும், உலக அளவிலும் கொண்டு செல்கிறார்கள். இது தமிழ் சினிமாவுக்கு பெருமை!. அதிலும் இந்த படத்தின் இயக்குனர் பிரம்மா யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் நேரடியாக இப்படத்தை இயக்கி இத்தனை விருதுகளை பெற்றிருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் பிரம்மா! அவருக்கு மேடை அனுபவம் இருக்கலாம்! ஆனால் மேடை அனுபவம் மட்டும் சினிமாவுக்கு பத்தாது! எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி அவருக்கு இந்த ஊடகம் கை வந்தது? எனக்கு புரியவில்லை. இந்த படத்தில் அவர் ஒரு எழுத்தாளராக, கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

‘குற்றம் கடிதல்’ படத்தில் எந்த இடத்திலும் நடிப்பு என்றில்லாமல் யதார்த்தமாக பிறந்த மேனியாக செய்திருக்கிறார்கள். தனது படைப்பு எந்த வகையில் இருக்க வேண்டும் என்று சிந்தித்திருகிறாரோ அதே மாதிரி எடுத்திருக்கிறார். இதில் யாருமே நடித்ததாக தெரியவில்லை. இதில் வாழ்ந்திருக்கிறார்கள். பிரம்மா அவர்களே கிரேட்!’’ என்றார் பாரதிராஜா!

பாரதிராஜா தவிர விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குனர்கள் ராம், கார்த்திக் சுப்பராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன், படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், நடிகர் பாவல் நவகீதன், இயக்குனர் பிரம்மா.கோ, இசை அமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன் ஆகியோரும் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;